Mysql-ல் பல்வேறு வகையான functions மற்றும் operators இருந்தாலும் ஒருசில முக்கியமானவைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

2.1 Concat function

Query-13

 

இரண்டு தனித்தனி columns-ல் உள்ள மதிப்புகளை இணைத்து ஒரே மதிப்பாக வெளியிடும் வேலையை concat function செய்கிறது. இது பின்வருமாறு.

select concat(name,role) from employees;

இதில் name மற்றும் role என்பது இரண்டு தனித்தனி columns ஆகும். அவற்றின் மதிப்பு concat மூலம் ஒன்றாக இணைத்து வெளியிடப்பட்டுள்ளது

2.2 Literals

Query-14

 

இரண்டு columns-ன் மதிப்புகளை இணைத்து வெளிப்படுத்துவதோடு அல்லாமல் நாம் விரும்பும் ஒருசில வார்த்தைகளையும் சேர்த்து வெளிப்படுத்த முடியும். இவ்வாறு இணைக்கப்படும் வார்த்தைகள் ‘literals’ எனப்படும்.

select concat(name,’ is a ‘,role) from employees;

இதில் ‘is a’ என்பது literals ஆகும்.

2.3 Escape sequence

Query-15

 

பொதுவாக ‘literals’ என்பவை எப்போதும் single quotes-க்குள் காணப்படும். ஆனால் single quote-ஐ உள்ளடக்கிய ஒருசில வார்த்தைகளை நாம் literal-ஆக கொடுக்க விரும்பினால் அது back slash-ஐப் பயன்படுத்தி பின்வருமாறு அமையும். இதனை escape sequence எனலாம்.

2.4 Distinct

Query-16

 

Distinct-ஆனது ஒரு் column-ல் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான மதிப்புகள் காணப்பட்டால் அதனை ஒரே ஒரு முறை மட்டும் வெளிப்படுத்தும். உதாரணத்துக்கு பின்வரும் query, ‘dept_name’ column-ல் உள்ள அனைத்து மதிப்புகளையும் வெளிப்படுத்துகிறது. பின்னர் distinct dept_name எனக் கொடுக்கும் போது ஒரு் மதிப்பினை ஒருமுறை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

select dept_name from department;

select distinct dept_name from department;

Query-17

 

distinct dept_name,location எனக் கொடுக்கும் போது dept_name மதிப்பினை ஒரு் location-க்கு ஒருமுறை வெளிப்படுத்துகிறது. இது பின்வருமாறு.

select dept_name,location from department;

select distinct dept_name,location from department;

இங்கு Testing என்பது Distinct மதிப்பாக இருந்தாலும், location வேறுபடுவதால், இருமுறை வருகிறது.

2.5 Simple Conditions

Query-18

 

ஏதேனும் ஒரு் கட்டளையின் அடிப்படையில் தகவல்களை வெளியிட where பயன்படுகிறது. உதாரணத்துக்கு ‘Testing’ department-ல் உள்ள விவரங்களை மட்டும் பட்டியலிடwhere dept_name =’Testing’ எனக் கொடுக்க வேண்டும். இது பின்வருமாறு.

select * from department where dept_name=’Testing’;

Query-19

 

தேதியை அடிப்படையாகக் கொண்டும் கட்டளைகளை அமைக்கலாம். இது பின்வருமாறு.

select * from employees where joining_date=’2008-01-09′;

2.6 Conditions with comparison operators

Query-20

 

ஒரு் column-ஐ ஒரு குறிப்பிட்ட மதிப்புடன் ஒப்பிட்டு அதனடிப்படையில் கட்டளைகளை அமைப்பதே conditions with comparison operators எனப்படும். உதாரணத்துக்கு 10,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்கும் நபர்களைப் பட்டியலிட comparison operator-ஐப் பின்வருமாறு அமைக்கலாம்.

select * from employees where salary<10000;

Query-21

 

between operator-ஐப் பயன்படுத்தி இரண்டு மதிப்புகளைக் கொடுத்து அதனிடையில் அமையும் தகவல்களை எல்லாம் பெற முடியும். அந்த இரண்டு மதிப்புகளில் ஒன்று lower limit-ஆகவும், மற்றொன்று upper limit-ஆகவும் அமையும். உதாரணத்துக்கு ரூபாய் 10,000-லிருந்து 20,000-வரை சம்பளம் வாங்கும் நபர்களைப் பட்டியலிட between operator-ஐப் பின்வருமாறு அமைக்கலாம்.

select * from employees where salary between 10000 and 20000;

Query-22

 

between operators-ன் lower மற்றும் upper limits-ஆக பெயர்களையும் கொடுக்க முடியும். பின்வரும் உதாரணத்தில் ‘Malathi’ மற்றும் ‘Sudha’ எனும் இரண்டு பெயர்களுக்கிடையில் அமையும் அனைத்துப் பெயர்களும் பட்டியலிடப்படும்.

select * from employees where name between ‘Malathi’ and ‘Sudha’;

Query-23

 

தொடர்ச்சியாக ஒருசில குறிப்பிட்ட மதிப்புகளைக் கொடுத்து அதனைப் பெற்று விளங்கும் தகவல்களை மட்டும் பட்டியலிட in operator-ஐப் பயன்படுத்தலாம். இது பின்வருமாறு.

select * from employees where salary in (12000,19500,4500);

இன்னும் சில comparison operators என்ன செய்கிறது என்பதைப் பின்வரும் படத்தில் காணலாம்.

2.7 Pattern Matching

Query-24

Like operator-ஆனது ஒரே மாதிரியான pattern-ல் அமையும் தகவல்களைப் பட்டியலிடும். உதாரணத்துக்கு S எனும் எழுத்தில் தொடங்கும் நபர்களின் பெயர்களைப் பட்டியலிட % எனும் wildcard character பின்வருமாறு பயன்படுகிறது.

select * from employees where name like ‘S%’;

 

Query-25

 

அவ்வாறே முதல் எழுத்து எதுவாக இருந்தாலும் இரண்டாம் எழுத்து e-வாக இருக்கும் பெயர்களைப் பட்டியலிட underscore எனும் wildcard character பின்வருமாறு பயன்படுகிறது.

select * from employees where name like ‘_e%’;

2.8 Order by

Query-26

 

Order by என்பது இயல்பாகத் தகவல்களை ஏறுவரிசையில் முறைப்படுத்திக் காட்ட உதவுகிறது. உதாரணத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையில் தகவல்களை முறைப்படுத்த query-யைப் பின்வருமாறு அமைக்கலாம்.

select * from employees order by joining_date;

Query-27

அவ்வாறே ஒருவர் தேர்வு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையில் தகவல்களை இறங்குவரிசையில் முறைப்படுத்த desc என்பதனை இறுதியில் குறிப்பிட வேண்டும்.

select * from employees order by joining_date desc;

Query-28

 

alias name-ஐப் பயன்படுத்திக் கூட தகவல்களை முறைப்படுத்த முடியும்.

select name,commission_pct as cmm from employees order by cmm;

Query-29

 

order by-ஐத் தொடர்ந்து 3 எனக் கொடுக்கும் போது, select statement-ல் 3-வதாக அமைந்துள்ள column-ன் அடிப்படையில் தகவல்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன..

select name,role,salary from employees order by 3;

Query-30

 

ஒன்றுக்கும் மேற்பட்ட columns-ன் அடிப்படையிலும் நாம் தகவல்களை முறையிட முடியும். பின்வரும் உதாரணத்தில் department மூலம் ஏறுவரிசையில் முறைப்படுத்தப்பட்ட தகவல்கள், பின்னர் ஒரே department-க்குள், salary மூலம் இறங்குவரிசையில் முறைப்படுத்தப்படுகின்றன.

select * from organisation order by department,salary desc;

2.9 Character functions

Query-31

 

UPPER எழுத்துக்களை பெரிய எழுத்தில் மாற்றிக் காட்டுகிறது. LOWER எழுத்துக்களை சிறிய எழுத்தில் மாற்றிக் காட்டுகிறது. இது பின்வருமாறு.

select name,upper(name),lower(name) from employees;

Query-32

 

CONCAT என்பது இரண்டு தனித்தனி column-ல் உள்ள மதிப்புகளை ஒன்றாக இணைத்து வெளிப்படுத்துகிறது. LENGTH என்பது column மதிப்பில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்துகிறது. INSTR மூலம் நாம் ஏதேனும் ஒரு் எழுத்து மற்றும் column-ஐக் கொடுத்து, அந்த எழுத்து column-ல் எத்தனையாவதாக உள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியும். SUBSTR மூலம் நாம் ஏதேனும் ஒரு் column மற்றும் எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை எழுத்துக்களை சோதிக்க வேண்டும் எனும் எல்லைகளைக் கொடுத்து அதற்கு ஏற்றார் போல் தகவல்களைப் பெற முடியும். இவை பின்வருமாறு.

select name,role,concat(name,role),length(role),instr(name,’a’) from employees;

select * from employees where substr(name,4,7)=’athi’;

2.10 Number functions

Query-33

 

ROUND-ஆனது தசம எண்களை அதற்கு நெருங்கிய முழு எண்களாக மாற்றும். ROUND(any column, 2) எனக் கொடுக்கும் போது அந்த column-ல் உள்ள தசம எண்களை இரண்டு தசம இலக்கத்தில் வெளிப்படுத்தும்.

select round(45.9574),round(45.9574,2) from employees;

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

எளிய தமிழில் MySQL – பாகம் 2 Copyright © 2015 by து.நித்யா is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book